தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் டி.எம். காளியண்ணன்! - விடைபெற்றார் டி.எம். காளியண்ணன்

நாமக்கல்: மறைந்த இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் உடல், 21 குண்டுகள் முழங்க நேற்றிரவு (மே.28) தகனம் செய்யப்பட்டது.

டி.எம். காளியண்ணன்
டி.எம். காளியண்ணன்

By

Published : May 29, 2021, 10:11 AM IST

இந்திய அரசியல் நிர்ணய சபையின் கடைசி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் டி.எம்.காளியண்ணன். இவர் வயது மூப்பின் காரணமாக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே.28) காலமானார். இவருக்கு வயது 101.

டி.எம். காளியண்ணன்

டி.எம். காளியண்ணனுக்கு அரசு மரியாதை

காந்தியவாதி, காங்கிரஸ் தொண்டர், சுதந்திரப் போராட்ட தியாகி என பல பன்முகத்தன்மையோடு ஒளிர்ந்த காளியண்ணனின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு மாலை 7 மணிக்கு செங்கோடம்பாளையம் இடுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், காளியண்ணனின் குடும்பத்தினர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் விடைபெற்றார் டி.எம். காளியண்ணன்

தொடர்ந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி செல்வம் தலைமையில் காவல் துறையினர் 21 குண்டுகள் முழங்கிட மரியாதை செய்தனர். இதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணன், ஜமீன்தாரி முறைக்கு எதிராக வாக்களித்து ஜமீன் ஒழிப்புக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எம். காளியண்ணன்

இதையும் படிங்க:'ஜமீன்தாரி முறை ஒழிவதற்கு வித்திட்ட ஜமீன் காளியண்ணன்'

ABOUT THE AUTHOR

...view details