தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூசூர் ஏரியை புனரமைத்த தொண்டு நிறுவனங்கள்!

நாமக்கல்: தூசூர் கிராமத்தில் உள்ள ஏரியை பல தொண்டு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து புனரமைத்தனர்.

social activites

By

Published : Jul 28, 2019, 4:37 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூர் என்ற கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தூசூர் ஏரி அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து வரும் உபரி நீரானது வந்தடைவது வழக்கம். ஆனால், தற்போது மழையின் அளவு குறைந்துவிட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முட்புதர்கள் சூழ்ந்து சமக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்துவந்தது.

தொண்டு நிறுவனங்களின் விழிப்புணர்வு

இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சில தொண்டு நிறுவனங்களால் தற்போது தூசூர் ஏரி புனரமைக்கப்பட்டுவருகிறது. ஏரியில் உள்ள முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்களின் மூலமாக அகற்றி தூசூர் ஏரியை மீண்டும் நீரை சேமித்து வைக்கும் ஏரியாக மாற்றும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். மேலும், அப்பகுதியில் புனரமைப்பு பணிகள் பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் நடைபெற்றது.

ஆறு, குளங்களை மீட்போம், மழை நீரை சேகரிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்ட இப்பேரணியானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையை அடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details