தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு - நாமக்கல் மாவட்டச் செய்திகள்

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் சரிவடைந்து, 3 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை கொள் முதல் விலை 20 காசுகள் சரிவு
முட்டை கொள் முதல் விலை 20 காசுகள் சரிவு

By

Published : Mar 11, 2021, 5:17 PM IST

நாமக்கலில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், 4 ரூபாய் 10 காசுகளாக இருந்த முட்டை ஒன்றின் கொள்முதல் விலை, 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 4 ரூபாய் 40 காசுகளாக இருந்த முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை மார்ச் 1ஆம் தேதி 20 காசுகள், மார்ச் 4ஆம் தேதி 10 காசுகள், இன்று 20 காசுகள் என தொடர்ந்து சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் மட்டும் 50 காசுகள் வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், "வட மாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து அதிகளவு தேக்கம் ஏற்பட்டுள்ளன. இதே போல் தமிழ்நாடு, கேரளாவிலும் முட்டை விற்பனை சரிவடைந்து தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இவ்விலை வரும் நாள்களில் படிப்படியாக உயர வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details