தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழ்நாடு

நாமக்கல்: இன்று தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றுள்ள நிலையில், வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 2,909 பேர் தேர்வு எழுதினர்.

நாமக்கல்

By

Published : Jun 8, 2019, 9:13 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளினை சுமார் 2,909 பேர் ஏழு மையங்களில் எழுதினர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வினை எழுத காலை 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வந்தனர். தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வின்போது செல்ஃபோன் போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், கைக்குட்டை எடுத்துச்செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

தேர்வு எழுதுபவர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நுழைவு சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு எடுத்துச்சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் தாளினை 12,348 பேர் சுமார் 36 மையங்களில் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details