நாமக்கலை அடுத்துள்ள செல்லப்பா காலனியில் உள்ள பகவதியம்மன் கோயிலில், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். வழக்கம்போல காலை கோயிலுக்குச் சென்ற ஊர்ப் பொதுமக்கள் உண்டியல் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கோயில் உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை - கோயில் உண்டியல் திருட்டு
நாமக்கல்: கோயில் உண்டியலை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
Temple undiyal theft
இது குறித்து நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி - தொடங்கியது மத்திய அரசு!