தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது தமிழ்நாடு மின்வாரியம் - அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: பெண்களின் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரியம் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்தார்.

Minister Thangamani

By

Published : Nov 8, 2019, 8:27 PM IST

Updated : Nov 8, 2019, 8:39 PM IST

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் தங்கமணி , சரோஜா ஆகியோர் 1667 பெண்களுக்கு ரூ. 22.92 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி வழங்கினர். மேலும் 125 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 27,524 ஏழை இளம்பெண்களுக்கு திருமணத்திற்கு ரூ.108 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 150 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு மானிய விலையில் இருச்சக்கர வாகனம் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, இந்தாண்டு மின்வாரியத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலக்கரி கொண்டு வருவதற்கான வாடகை உயர்வு, காற்றாலை மின் உற்பத்திக்கான செலவுதான் காரணம் என தெரிவித்தார்.

7 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது தமிழ்நாடு மின்வாரியம் - அமைச்சர் தங்கமணி

மேலும், உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அதை சந்திக்க அதிமுக தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது - துரைமுருகன்

Last Updated : Nov 8, 2019, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details