தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி, "லாரிகளை புதுப்பிக்கும் முறையில் (எப்.சி) மத்திய அரசு புதிதாக மாற்றம் செய்துள்ளது. அதன்படி, லாரிகள் முழுவதும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் (ஒளிரும் தன்மை கொண்ட முப்பரிமாண பட்டை) ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
'லாரிகளுக்கு பழைய புதுப்பித்தல் முறை தொடர தமிழ்நாடு அரசு அனுமதி' - லாரி உரிமையாளர்கள் சங்கம்
நாமக்கல்: லாரிகளுக்கு பழைய புதுப்பித்தல் முறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தொடர தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் லாரிகள் முழுவதும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஏற்படும் செலவு அதிகமாக இருப்பதாகவும் அதனை நடைமுறைப்படுத்த கால அவகாசம் கேட்டு போக்குவரத்து துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பழைய எப்.சி முறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தொடரும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
லாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த ஆன்லைன் முறையை பின்பற்றலாம் எனவும் லாரிகளை சாலையோரம் நிறுத்தி வைக்கும் போது ஆர்.டி.ஓ உள்ளிட்ட அலுவலர்கள் விதிமீறல் என்ற பெயரில் ஆன்லைனில், லாரி பதிவு எண்ணை கொண்டு அபராதம் வசூலிப்பதாகவும் இந்த முறையை மாநில அரசு கைவிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.