தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடியுடன் இருக்கும் சிலர் கூடிய விரைவில் பாஜகவில் சேர உள்ளனர் - புகழேந்தி - bjp

எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பாஜகவில் சேர தயாராக உள்ளனர் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடியுடன் இருக்கும் சிலர் கூடிய விரைவில் பாஜகவில் சேர உள்ளனர்
எடப்பாடியுடன் இருக்கும் சிலர் கூடிய விரைவில் பாஜகவில் சேர உள்ளனர்

By

Published : Nov 6, 2022, 7:32 AM IST

நாமக்கல்: ராசிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,’’அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்கக் கூடாது என்பதில் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.‌

தங்கமணியும், வேலுமணியும், எடப்பாடி பழனிசாமியை இயக்குவதில் பின்புலமாக உள்ளனர். தங்கமணிக்கு முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அவரது விருப்பு வெறுப்பு காரணமாக 4 தொகுதிகளை அதிமுக இழந்தது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தங்கமணி தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? ஓபிஎஸ் தனக்குப் பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி தருவதாகத் தங்கமணி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இல்லாத அதிகாரமா? இவர்கள் யார் மந்திரி பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? பிரிந்து இருக்கின்ற அதிமுகவினர் மற்றும் சசிகலா உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டு அதிமுகவை வலுப்படுத்த ஓபிஎஸ் தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் கூடிய விரைவில் பாஜகவில் சேர தயாராக உள்ளனர்’’எனத் தெரிவித்தார்.

எடப்பாடியுடன் இருக்கும் சிலர் கூடிய விரைவில் பாஜகவில் சேர உள்ளனர்

இதையும் படிங்க:இந்தி திணிப்பை நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு - அர்ஜுன் சம்பத்

ABOUT THE AUTHOR

...view details