தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் தயாரித்த சமூக நலத்துறை

நாமக்கல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமூக நலத்துறை சார்பாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

Social welfare department manufacturing face mask for students
Social welfare department manufacturing face mask for students

By

Published : Jun 6, 2020, 11:53 PM IST

உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட உதவும் வகையில் சிறப்பு நாற்காலிகள் அறிமுக விழா நாமக்கல் ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் மாற்று திறனாளிகள் திறன் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 34 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 94 இலட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, "தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிட சமூக நலத்துறை சார்பில் 45 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள இரண்டு லட்சம் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதும் வகையில் பள்ளிக் கல்வித் தறையிடம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் 45 இலட்சம் முகக்கவசங்கள் முழுமையாக தயாரிக்கும் பணி நிறைவடைந்து விடும்‌.
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளுகளுக்கான ஒரு இலட்சம் சிறப்பு முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:கரோனா பாதித்த இடங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details