மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சண்முக ஆனந்த். இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காரில் சென்றார். அப்போது அவரது காரில், கணக்கில் வராத தங்க நகைகள் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் விருதுநகர் சாலையில் அவர் சென்றுகொண்டு இருந்தபோது, காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத 100 சவரன் நகைகள் காரில் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டிலிருந்து 6 லட்சம் ரூபாய் பறிமுதல்! - நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல்: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து சண்முக ஆனந்தின் தாயார் வீடு மற்றும் அவரது நாமக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவரது வீட்டில் கணக்கில் வராத, 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணக்கில் வராத 100 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்ட புகாரில், சண்முக ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்