நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டை மேட்டில் ஜனவரி 28ஆம் தேதி அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்காக பொம்மைகுட்டை மேட்டில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. அப்போது மேடையின் மிக அருகே நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார். இந்த விழாவின் இறுதியில் தேசீய கீதம் இசைக்கப்பட்டது.அப்போது சிவப்பிரகாசம் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே செல்போன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.