தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மடிக்கணினி வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவிகள் - மாணவிகள் முற்றுகை

நாமக்கல்: கணினி அறிவியல் துறைக்கு இலவச மடிக்கணினி வழங்காமல், மற்ற துறை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய தலைமையாசிரியரை கண்டித்து பள்ளி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மடிக்கணினி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை பள்ளி மாணவிகள் முற்றுகை!

By

Published : Jul 16, 2019, 7:20 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயல்பட்டு வரும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி வழங்கவேண்டும் எனக்கோரி சுமார் 30க்கும் மேற்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் மாணவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

மடிக்கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவிகள்

அதில், “தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள், கடந்த ஜூலை இரண்டாம் தேதி, கணினி அறிவியல் அல்லாத மாணவிகளான உயிரியல் துறைக்கும், வணிகவியல் துறை சார்ந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் வழங்கினார். மடிக்கணினி அவசியம் தேவைப்படும் கணினி அறிவியல் துறைசார்ந்த 31 மாணவிகளுக்கு வழங்கவில்லை.

இதனால், தங்களது கல்வி பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது” எனத் குறிப்பிட்டுள்ளனர். கணினி துறைசார்ந்த மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்காமல், கணினி பிரிவு அல்லாத மாணவிகளுக்கு மட்டும் மாநில அரசின் இலவச மடிக்கணினி வழங்கியது பெரும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என்று குறிப்பிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details