தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நன்கொடை தராததால் செல்போன் கடை சூறை

நாமக்கல்: நன்கொடை தராததால் ஆத்திரத்தில் செல்போன் கடையை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RSS_namakkal_Rampage

By

Published : Mar 14, 2019, 11:45 PM IST

நாமக்கல் மாவட்டம், முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் நேற்று இரவு ஆர்எஸ்எஸ் அமைப்பினரான இராஜேஷ், ஜெகன், நவீன்,மணி ஆகிய நால்வரும் மதுபோதையில் நன்கொடை கேட்டுள்ளனர்.

நன்கொடை கொடுக்க மறுத்த செல்போன் கடை உரிமையாளர் பாலமுருகனை மிரட்டியுள்ளனர். இருப்பினும் அவர் நன்கொடை கொடுக்க மறுத்ததால் அவரது கடையை அடித்து நொறுக்கி சூரையாடினர்.

இதுகுறித்து, தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளர் பாலமுருகனிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரும் பீர் பாட்டிலால் அவர்களை தாக்கமுற்பட்டபோது அதிர்ஷ்டவசமாக கடையில் விழுந்துள்ளது.

இது குறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால், ஆர்எஸ்எஸ் அமைப்பினரான நால்வரும் தலைமறைவாயினர். தற்போது அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details