நாமக்கல் கொங்குநாடு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி - road safety awareness
நாமக்கல்: தனியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்
road safety awareness
200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப்பேரணியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும், சீட்பெல்ட் அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
இப்பேரணியானது நாமக்கல் அண்ணா சிலை அருகே தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவடைந்தது.