தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை புனரமைக்க வேண்டி நூதன போராட்டம் - நுாதன முறை

நாமக்கல்: ராசிபுரத்தில் சாலையை புனரமைக்கக் கோரி ராசிபுரம்-சேலம் சாலையில் மக்கள் நல கூட்டமைப்பு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் சார்பில் முகமூடி அணிந்து நுாதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

road-damage

By

Published : Apr 29, 2019, 2:57 PM IST

இது குறித்து வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், 'ராசிபுரம் சாலையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு குழிகள் தோண்டப்பட்டன. அதற்கிடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடைப்பில் போடப்பட்டது.

அதனால் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஒரே சமயத்தில் ராசிபுரத்தில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் இது போன்று பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலையை புனரமைக்க வேண்டி நூதன போராட்டம்
மேலும், இந்தச் சாலையில் செல்லும்போது புழுதிகள் கிளம்பி பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது. அதற்காக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முகமூடி அணிந்து போராட்டம் நடத்துகிறோம்' என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details