நாமக்கல்லை அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(37), மகாலட்சுமி(35), காந்திமதி(15), துர்கா(14), நவீன்குமார்(02) மற்றும் குணசேகரன்(75) ஆகியோர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர்.
கொத்தடிமை குடும்பத்தை மீட்ட மாவட்ட சார்-ஆட்சியர் !
நாமக்கல்: பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த குடும்பத்தை மாவட்ட சார்-ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையிலான குழு மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
namakkal
இந்நிலையில் செங்கல் சூளையின் உரிமையாளர் குப்புசாமி இவர்களை அடித்து துன்புறுத்தி உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே அவர்கள் மாவட்ட சார்-ஆட்சியர் கிராந்திகுமாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி மாவட்ட சார்-ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையிலான குழு கொத்தடிமைகளாக பணியாற்றிய ஆறு பேரையும் மீட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆறு பேரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.