ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குழந்தைகள் விற்பனை வழக்கு: 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - குழந்தை விற்பனை
நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஏழு பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழு பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
இவர்களின் நீதிமன்ற காவலில் இன்றுடன் (மே 24) முடிவடைந்ததால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி, அருள்சாமி உட்பட ஏழு பேரையும் இன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி வடிவேல் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.