நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தறிதொழில் செய்துவருகிறார். ராஜேந்திரன் இன்று (டிசம்பர் 4) தனது குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில் இவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அருகிலிருந்தவர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
குடிசை வீட்டில் தீ விபத்து: 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம் - ராசிபுரத்தில் உள்ள குடிசை வீட்டில் தீ விபத்து
நாமக்கல்: ராசிபுரம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், வீட்டில் இருந்த பொருள்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
இந்தத் தீவிபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகின்றனது. எனினும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.