நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலி அமுதவல்லி, அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா,அருள்சாமி, செல்வி உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு; 11 பேரின் காவல்நீட்டிப்பு!
நாமக்கல்: ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 11 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம்
இந்நிலையில், ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. அதனால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.