நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி பிறந்தநாளான நேற்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
‘அடுத்தாண்டு கட்சி தொடங்குவது நிச்சயம்’ - ரஜினியின் சகோதரர் - ஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல்: ரஜினி அடுத்தாண்டு கட்சியை தொடங்குவார் என ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிறப்பு விருந்தினராக ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன் பங்கேற்று குழந்தைக்கு மோதிரம் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சத்தியநாராயணன் கூறுகையில், ‘அடுத்தாண்டு கட்சி தொடங்குவார். அதன் அறிவிப்பு விரைவில் வர உள்ளது. கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவார். கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்து கண்டிப்பாக அவர் அறிவிப்பார். தொண்டர்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர். தர்ம காரியங்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர் நிச்சியம் புண்ணியம் கிடைக்கும்’ என தெரிவித்தார்.