நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பெண் தான் பெற்ற குழந்தைகளையே முறையாகப் பராமரிக்கத் தவறியதாகக் கூறி, அவரது உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சாமியாரிடம் மாந்திரீகம் சரிசெய்ய அவரை அழைத்து சென்றனர்.
சாமி என்னை விட்டுடுங்க..கதறும் பெண்- கொடூரமாகத் தாக்கும் காணொலி! - priest attacks woman video goes viral
நாமக்கல்: போதைப் பொருள்களுக்கு அடிமையான பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் சாமியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
அங்கு அந்த சாமியார் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அங்கிருந்த சாமியார் மது அருந்திவிட்டு தான் அப்பெண்ணிடம் பேசவேத் தொடங்குகிறார். சாட்டை மற்றும் குச்சியால் அந்தப் பெண்ணை அடித்தும், அவரது கூந்தலை பிடித்து தரதரவென இழுத்தும் கொடுமைப்படுத்தும் அந்த சாமியார், பெண்ணின் கதறலை துட்சமென நினைத்து முதுகிலேயே மிதிக்கிறார். பெண்ணுடைய உறவினர்களோ, சாமியாரை கருப்பச்சாமி என நினைத்துக் கொள்; பொறுத்துக் கொள் என அறிவுரை கூறுகின்றனர். இந்த வீடியோ, காண்போர் மனதை பதை பதைக்க வைக்கிறது.
போதைப்பழக்கம் உடலுக்கும், உறவுக்கும் ஊறு விளைவிக்கும் எனினும், அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு மூட நம்பிக்கை சரியான தீர்வல்ல. இந்நிலையில், ஒரு பெண்ணின் மீது இவ்வாறு கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சாமியாரின் இந்த செயலை கண்டித்த சமூக ஆர்வலர்கள், சாமியாரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.