தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு நிதியுதவி அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் - கைத்தறி தொழிலாளர்கள்

நாமக்கல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு தம்பதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கக் கோரி விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கந்து வட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை: நிவாரணம் வழங்ககோரி விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!
Power loom workers

By

Published : Oct 20, 2020, 4:09 PM IST

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்திலுள்ள அண்ணா சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் வெப்படை, எலச்சிபாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 2019 - 2020 ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். அதனை தீபாவளிக்கு 15 நாள்களுக்கு முன்பே வழங்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினரின் இரு குழந்தைகளுக்கும் அரசு 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details