தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நுகர்வு அதிகம்... முட்டை உற்பத்தி குறைவு - 300 கோடி ரூபாய்

நாமக்கல்: ஊரடங்கால் கோழி பண்ணை தொழிலில் 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்குராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்குராஜ்
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்குராஜ்

By

Published : May 5, 2020, 10:59 AM IST

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்குராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோழிப் பன்ணையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், முட்டை, கோழி தீவனங்கள் எடுத்து செல்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிங்குராஜ் , "கரோனா பிரச்னையால் கோழிப் பண்ணையாளர்களுக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, கோடை காலம் தொடங்கியுள்ளதால் முட்டை உற்பத்தி 10 முதல் 15% குறைந்து தற்போது தினசரி 3.5 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை நுகர்வு நன்றாக உள்ளதால் அதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது"எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்றுவரும் லாரி ஓட்டுனர்கள் கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்துவதால் லாரி ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் பார்க்க:புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details