தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் கோழி உற்பத்தி சார்ந்த தொழில்கள் கண்காட்சி - ஏராளமானோர் பங்கேற்பு! - expo

நாமக்கல்: நாமக்கல்லில் முதன் முறையாக வீரியமிக்க கோழி வளர்ச்சி, உயர் ரக மாடுகள் உற்பத்தி ஆகியவை குறித்த புதிய ஆலோசனை கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

கோழி உற்பத்தி சார்ந்த தொழில்கள் கண்காட்சி

By

Published : May 4, 2019, 11:35 PM IST


நாமக்கல் கோழி பண்ணையாளர் சங்கம், ஜாஸ்ட் இந்தியா தனியார் அமைப்பு ஆகியோர் சார்பில் தமிழ்நாடு அளவில் கோழி உற்பத்தி சார்ந்த தொழில்கள், விவசாயம் சார்ந்த கண்காட்சி ஆகிய உள்ளடக்கிய மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சி இன்று நாமக்கல்லில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு கோழிப்பண்ணை நாமக்கல் மண்டல NECC தலைவர் செல்வராஜ் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

சுமார் 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோழி, வான்கோழி, உள்ளிட்டவற்றோடு, கால்நடை வளர்ப்பில் புதிய கண்டுபிடிப்பு, நவீன ரக விவசாய இடுபொருட்கள், விவசாய உபகரணங்கள், உயர் ரக மாடுகளை உடைய வளர்ச்சி பற்றிய ஆலோசனைகள் குறித்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தொழில் சார்ந்த கண்காட்சி பொருட்களும் இடம்பெற்று இருந்தன.

நாமக்கல்லில் கோழி உற்பத்தி சார்ந்த தொழில்கள் கண்காட்சி

கால்நடை வளர்ப்பில் அதிக பால் தரும் கறவை மாடுகள், சூப்பர் நேப்பியர், அடர் தீவன செலவுகளைக் குறைந்த அளவுக்கு விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றிருந்தன. கால்நடை வளர்ப்பில் உள்ள புல் வகைகள், தீவணங்கள் குறித்த பொருள்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதனை ஏராளமான கோழி, மாட்டு பயன்பாட்டு விவசாயிகள் அதிகளவில் பார்த்து கண்டு களித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details