கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 36க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
அதாவது தவளை மாதிரி துள்ளி போக வைப்பது, தண்டால் எடுப்பது, உக்கார்ந்து எழுதல் போன்ற தண்டனைகளை காவல்துறையினர் ஒருவர் செய்து காண்பிக்க தடை உத்தரவை பின்பற்றாத வாகன ஓட்டிகள் செய்தனர்.