தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளியில் பாலியல் ரீதியிலான உறவு வைத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்! - பள்ளியில் உறவு வைத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்

நாமக்கல்: குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே பாலியல் ரீதியிலான உறவு வைத்த சம்பவம் தெரிய வந்ததையடுத்து, ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

By

Published : Sep 10, 2019, 5:59 PM IST

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அங்கன்வாடி பொறுப்பாளருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக்கொள்ள முயன்ற ஆசிரியருக்கு ஊர்மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் கடந்த நான்கு வருடங்களாக ஆசிரியராக புதன்சந்தையைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பொறுப்பாளராக இருக்கும் ஜெயந்தி என்பவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்

கடந்த சில மாதங்களாகவே பள்ளி வளாகத்தில் கழிவறையிலேயே ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்ததையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலேயே பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபடமுயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் இன்று பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்குச் சென்று தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரிகளும், புதுச்சத்திரம் காவல்துறையினரும் பள்ளி ஆசிரியர் சரவணனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பேட்டி

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் கூறுகையில்,' ஏற்கனவே நான் இவர்கள் இருவரையும் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துள்ளேன். ஆனால் அதையும் மீறி தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்' என வேதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே, பள்ளி வளாகத்தில் ஒழுங்கீனமாக செயல்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details