நாமக்கல் நாடாளுமன்றத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாமக்கல் சட்டமன்ற தொகுதிகளான திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி, மல்லசமுத்திரம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இதுவரை பரப்புரை மேற்கொண்ட போது மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகப்பெரிய கோபத்தில் உள்ளது தெரிந்தது.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
நாமக்கல்: மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் நாமக்கலில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் எனக்கு நல்ல ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மத்திய அரசின் ஜிஎஸ்டியால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பேன். சங்ககிரி லாரி பாடி கட்டும் தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். கொசவம்பட்டி குப்பைக்கிடங்கில் குப்பைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் தண்ணீர் மாசுபடுகிறது. இவற்றை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.