தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து; சகோதர்கள் பலி! - பள்ளி்பபாளையம் வெடிவிபத்து

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், சகோதரர்கள் இருவர் இறந்தனர். சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

pallipalayam fire
pallipalayam fire

By

Published : Oct 30, 2020, 1:32 AM IST

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியிலுள்ள ஒரு வீட்டில், இன்று (அக்.29) இரவு 9 மணியளவில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தில், அந்த வீட்டிலிருந்து பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து வெடித்த பட்டாசால், வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்தது. இந்த பயங்கர விபத்தின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இச்சம்பவத்தில், இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, வெப்படை தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த தங்கராஜ் (27), ராஜகணபதி (25) என்பதும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சகோதரர்கள் இருவரும், தாய் மற்றும் சகோதரியுடன் இப்பகுதியில் குடியேறியேறியுள்ளனர். வீட்டில் வைத்திருந்த பட்டாசுகளால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க :பெண்ணைத் தாக்கிய திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details