கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலைதொடர்பு அலுவலகம் எதிரே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்தவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக கார் ஓட்டுநர் காரை இடது பக்கமாக திருப்ப முயன்றுள்ளார். அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த குடிசை வீட்டிற்குள் புகுந்தது. அப்போது குடிசை வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த கௌசல்யா (65) என்ற மூதாட்டியின் மீது கார் மோதியுள்ளது. இதில் கௌசல்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு - பரமத்தி
நாமக்கல்: கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் அருகே நிலைதடுமாறிய கார் சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்தார்.
Old lady died in car accident
விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்த மூன்று நபர்களும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.