நாமக்கல்லில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சி.விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் ரூ. 1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 34.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசுக் கட்டடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ. 134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் முதலமைச்சர் பேசும்போது, "நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணை, ஜவ்வரிசி, விசைத்தறி, போர்வெல், லாரி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குகிறது. உலகிலேயே சிறந்த மருத்துவ சேவை கிடைக்கும் இடமாக தமிழ்நாடு மாறி வருகிறது. சென்ற 9 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு உருவாக்கி உள்ளது" என்றார்.