நாமக்கல்: கோவாவின் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் நடத்திய மூன்றாவது தேசிய கூட்டமைப்பு கோப்பை 2020-21 போட்டியில் 427 போட்டியாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றனர். இப்போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தற்போது நேபாளத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நேபாளம் செல்லவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்த திமுக - dmk helped sports person
இளைஞர் மேம்பாட்டு சங்கம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று, நேபாளத்தில் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கலந்துகொள்ள விளையாட்டு வீரர்கள் மூவருக்கு தலா 15ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழங்கினார்.
நோபாளம் செல்லவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்த திமுக
போட்டியில் கலந்துகொள்ள உள்ள சந்தோஷ், கார்த்திகேயன் ஆகியோருக்கு திமுக சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வீரர்களுக்கு தலா 15ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி பாராட்டினார். மேலும், வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க:100 விழுக்காடு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்