நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில், தங்கம் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே மருத்துவமனைக்கு சொந்தமான கேன்டீன் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை நாமக்கல் நகர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை பெய்தது. அப்போது அந்த வழியே சென்றவர்கள் மருத்துவமனை கேன்டீன் முன்பு மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
சூறைக்காற்றால் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் பலி! - இருவர் பலி
நாமக்கல்: பலத்த சூறைகாற்று வீசியதால் தனியார் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்ததில் மருத்துவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
சூறாவளி காற்று பலமாக வீசத் தொடங்கியதால், மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை ஒன்று கூரை மீது சரிந்து விழுந்தது. இந்த இடர்பாட்டில் சிக்கி 60 வயதான மருத்துவர் கலா, அவரது கார் ஓட்டுநர் மோகன்ராஜ், கேன்டீன் உரிமையாளர் பாலகிருஷ்ணன், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா, போஸ், முத்தரசன், மருதுபாண்டி ஆகியோர் காயமடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மருத்துவர் கலா மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த நாமக்கல் சார் ஆட்சியர் கிரந்திகுமார் பதி மற்றும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.