தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லையெனில் உங்களுக்கு நல்ல சாவே வராது!' - ADMK

நாமக்கல்: இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லையென்றால் உங்களுக்கு நல்ல சாவே வராது, நன்றிகெட்ட தொகுதி என்ற பெயரை எடுத்துவிட வேண்டாம் என நாமக்கல் அதிமுக எம்எல்ஏ சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

admk
admk

By

Published : Mar 22, 2021, 9:14 PM IST

Updated : Mar 22, 2021, 10:28 PM IST

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 21) அத்தொகுதிக்குள்பட்ட மோகனூரில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, வேட்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லையெனில் உங்களுக்கு நல்ல சாவே வராது - நாமக்கல் அதிமுக எம்எல்ஏ பாஸ்கரன்

அப்போது பேசிய நாமக்கல் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான பாஸ்கர் பேசுகையில், திமுக வேட்பாளர், நிர்வாகிகள், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரைக் கடுமையாக விமர்சனம்செய்தார்.

ஒரு கட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்களுக்கு நல்ல சாவே வராது எனவும் திமுகவிற்கு வாக்களித்து நன்றிகெட்ட நாமக்கல் தொகுதி மக்கள் எனப் பெயரை எடுத்துவிட வேண்டாம் எனவும் பொதுமக்களைப் பார்த்து கடுமையாகச் சாடினார்.

Last Updated : Mar 22, 2021, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details