நாமக்கல்:தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று குறைந்துவருவதால் நீண்ட நாட்களுக்குப் பின் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப்.1) 557 மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதையடுத்து அம்மாணவி அவரது வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டார்.
அதேபோல், அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கும்;கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியைக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
மேலும், தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறந் 3 நாள்களில் 3 மாணவிகளுக்கும், 1 ஆசிரியைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.