மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை ஒரு நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கூறி, நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்கியுள்ளனர்.
நாமக்கல்லில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் - கொல்கத்தா மருத்துவர்கள்
நாமக்கல்: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைக் கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் ஆறு நாட்களாக போராட்டம் நடத்தினர். மேலும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்,
- மருத்துவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க நாமக்கல் மாவட்ட கிளை தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.