நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ராசிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் குடிசை வீட்டில் ஒருவந்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசுப்பரமணி வசித்துவந்தார். இந்நிலையில், அதிகாலையில், குளிர் காய்வதற்காக பாலசுப்பரமணி தனது வீட்டின் முன்பு தீ மூட்டியுள்ளார்.
காற்றின் வேகம் அதிகரித்த காரணமாக அத்தீயானது அருகிலிருந்து பாலசுப்பிரமணியனின் குடிசை வீட்டில் பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் பொருள்களை எடுக்கச் சென்ற அவர், வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். தீ மளமளவான பரவியதால், உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.