தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ - namakkal today news

நாமக்கல்: பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Minister Thangamani open new veterinary hospital

By

Published : Nov 2, 2019, 8:55 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள கருந்தேவம்பாளையத்தில் 31.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டடத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ”பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அலுவலர்களிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொடுமுடி காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளும் தொடங்கப்படும்.

புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி

அதிமுக அரசு மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது'' என்றார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்.பி'

ABOUT THE AUTHOR

...view details