தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்ப்படும்’-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - Minister sengottaiyan

நாமக்கல்: கரோனா பரவல் காரணமாக 60 சதவீத பாடத்திட்டத்திற்கு மட்டுமே கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து மட்டுமே பொதுத் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 29, 2020, 5:05 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த எளையாம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாமக்கல்-சேலம்-கரூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 316 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா இன்று (அக். 29) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் நாமக்கல்-சேலம்-கரூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 316 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணைகளை அந்தந்த பள்ளி நிர்வாகிகளிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “நீட் தேர்வை பொறுத்தவரை மாநில அரசு வடிவமைத்த பாடத்திட்டத்தின்கீழ் 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாநில அரசு பாடத்திட்டம் வடிவமைக்பட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் 40 வயதாக குறைத்தது குறித்து பொதுமக்களும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் இந்த வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 60 சதவீத பாடத்திட்டத்திற்கு மட்டுமே கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்துதான் பொதுத் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். ஒருவேளை தொற்று தடைக்காலம் அதிகரித்தால் பாடத்திட்டதை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். பள்ளிக்கல்வி துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறைகளோடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details