திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை மையமாகக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் செயல்பட்டுவந்தது. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு அவசர கால மருத்துவ வசதி கிடைத்துவந்தது.
இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூன்று மாதங்களுக்கு முன்பு, குமாரமங்கலத்தை மையமாகக் கொண்டு செயல்படும்படி மாற்றியமைக்கப்பட்டது. இதனால், எலச்சிபாளையம் அதனைச் சுற்றியுள்ள 30 கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இதனால், இப்பகுதி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் எலச்சிபாளைத்தை மையாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டியும் தலையில் கட்டுகட்டியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.