தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு டெண்டர் வழங்காத விவகாரம்:  சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதம்!

நாமக்கல்: எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு டெண்டர் வழங்கும் விவகாரம் தொடர்பாக அச்சங்கத்தின் அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதம்

By

Published : Jun 15, 2019, 10:18 PM IST

தென்னிந்திய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ளது. எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் நிறுவன சேமிப்பு கிடங்கிலிருந்து சமையல் எரிவாயு நிலையங்களுக்கு லோடு எற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்கள் கோரிய ஒப்பந்தத்தில் 4,800 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்கிவருகிறது. இதில், 700 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் லோடு ஏதும் இல்லாமல் கடந்த எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகச் சங்க நிர்வாகிகள் அறிவித்த நிலையில், இதுவரை வேலைவாய்ப்பு பெற்றுத் தராததால், தங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரக் கோரி எல்பிஜி டேங்கர் லாரி சங்க அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதம்

இதனையடுத்து, சங்க அலுவலகத்திற்கு வந்த சங்க நிர்வாகிகள், லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 20ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என உறுதி அளித்ததன் அடிப்படையில் ஐந்து மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details