தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல் டீசல் விலை’ - லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

நாமக்கல்: நாளை பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டுமென தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

சண்முகப்பா

By

Published : Jul 4, 2019, 8:16 PM IST

நாமக்கல் வட்டம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பாரி, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சண்முகப்பா, "மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் இந்தியாவில் 12 லட்சம் கீளினர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இனி எட்டாம் வகுப்பு படித்து திறன் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் ஓட்டுனர் ஆகலாம் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மோட்டார் வாகனங்களுக்குக் காப்பீடு மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, அந்த கட்டணங்களைக் குறைக்க வேண்டும். லாரிகளுக்குச் சுங்க கட்டணத்தை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செலுத்த அனுமதியளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்தியா முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி புக் என்ற புதிய சட்டத்தை புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதை லாரி உரிமையாளர்கள் வரவேற்கிறோம். நாளை தாக்கல் செய்ய உள்ள பொது பட்ஜெட்டில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

சண்முகப்பா பேட்டி

லாரிகளுக்குக் சுங்க கட்டணத்தையும் காப்பீடு கட்டணத்தையும் குறைக்க வேண்டும். அதேபோல் லாரி ஓட்டுநர்களுக்கு மத்திய அரசு தொழிலாளர் காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவை வழங்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details