நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தில் 4,792 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 290 பேர் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்தின் 2019-21ஆம் ஆண்டுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்புமனுத் தாக்கல் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைப் பொருளாளர் ஆகிய ஐந்து பதவிகளுக்கும் 50 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் - போலீசார் குவிப்பு
நாமக்கல்: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தற்போது தலைவராக இருக்கும் வாங்கிலி, மீண்டும் அதே பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து சேகர் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோன்று செயலாளர் பதவிக்கு ரவி என்பவரும், தற்போது செயளாராக இருக்கும் அருண் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று பொருளாளர் பதவிக்கு தற்போதுள்ள சீரங்கனும், அவரை எதிர்த்து சுப்பிரமணி என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி பிரிவினர், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அதனால், தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்படும் சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி, காவல்துறையினர் லாரி சங்க அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.