நாமக்கலில் கட்டப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாமக்கலில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நீதி மன்றத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்தும்போது, அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப் பட்டுவிடக்கூடாது. வழக்கு மற்றும் சட்ட விதிமுறைகள், பொறுப்புணர்வுகளை நன்கு அறிந்துகொண்டு காவல்துறை, வழக்கறிஞர்கள் செயல்பட்டால், நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்கலாம்.
‘பொறுப்புகளை உணர்ந்து வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்’ - நீதிபதி அறிவுரை - Lawyers
நாமக்கல்: வழக்கறிஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அறிவுரை வழங்கியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர்
அதேபோல், நீதிமன்றத்தால் மட்டுமே வழக்குகள் தாமதம் ஆகிறது என்ற தோற்றதையும் மாற்ற முடியும். மேலும் நீதி விசாரணைகள் விரைந்து நடைபெறவும், நீதித் துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் வழக்கறிஞர்கள் தங்கள் பொறுப்புளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.