தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2019, 8:41 PM IST

ETV Bharat / state

நீதிபதி தஹில் ரமாணி ராஜினாமா விவகாரம்: பணிகளை புறக்கணிக்கும் வழக்கறிஞர்கள் சங்கம்!

நாமக்கல்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹீல் ரமாணி ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சங்கம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒரு வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சண்முகம் மற்றும் வழக்கறிஞர் சுரேஷிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வழக்கறிஞரை டிஎஸ்பி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் சங்க செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தக் கூட்டத்தில் மாநில பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு, ராசிபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் காமராஜ், நாமக்கல் சிவில் பார் அசோசியேசன் தலைவர் முனிராஜ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய டிஎஸ்பியை பணியிட மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோரை சந்தித்து மனு அளிப்பது என்றும், நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமைவரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க போவதாகவும் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details