தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் -தங்கமணி

நாமக்கல்: அரசு மருத்துவக் கல்லூரியை நாமக்கல்லில் கொண்டு வருவதே வாழ்நாள் லட்சியம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ministers

By

Published : Aug 24, 2019, 4:53 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டான்சி காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சத்துணவு மற்றும் சமூகநலன் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் திறந்துவைத்தனர்.

சட்டக்கல்லூரியை திறந்துவைத்த அமைச்சர்கள்

அப்போது பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், ’தமிழ்நாட்டில் இந்தாண்டு மூன்று சட்டக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தனியார் சட்ட கல்லூரிகளில் அதிகளவு கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. ஆனால், அரசு சட்டக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, டான்சி காட்சியகத்தில் செயல்பட்டுவரும் நாமக்கல் சட்டக்கல்லூரியானது விரைவில் அடுத்தாண்டிற்குள் சொந்த கட்டடத்தில் இயங்கும்’ என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, ”நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைப்பதே தன்னுடைய கனவு திட்டமாகும். இந்த புதிய சட்ட கல்லூரிக்கு ஓராண்டுக்குள் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 4 தாலுகாக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details