நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பாதைகள் முழுவதும் பசுமை திரும்பியுள்ள நிலையில் யானைகளுக்குப் பிடித்த உணவுகளான மூங்கில், வாழைமரங்கள் மற்றும் கோரை புற்கள் ஆகியவை பசுமையான வளர்ந்துள்ளன.
இதனால், அவற்றை உண்பதற்காகச் சமவெளிப் பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் குன்னூரிற்குப் படையெடுத்துள்ளன. இந்த நிலையில் காட்டேரி மஞ்சூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் சாலையைக் கடக்கும் பொழுது அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை செல்பி எடுக்கின்றனர்.
இதனைக் கண்ட காட்டுயானைகள் அங்குள்ளவர்களை ஆக்ரோசமாக விரட்டி உள்ளன. வனத்துறையினர் பொதுமக்களிடம் யானைகள் அருகே செல்ல வேண்டாம் எனவும் செல்பி எடுக்க வேண்டாம், எனவும் அறிவுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற அத்துமீறலால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன.
ஆகையால், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குன்னூர் பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள் - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்! இதையும் படிங்க:Video: குன்னூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பீதி!