தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டும் - வலியுறுத்தும் கொங்கு நாடு தேசியக் கட்சி - நாமக்கல் செய்திகள்

நாமக்கல் : சென்னையில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதை மக்களுக்கு அரசு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

By

Published : Jun 16, 2020, 7:47 PM IST

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நாமக்கல்லில் இன்று (ஜூன் 16) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசு கரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும். சமூகப் பரவலாக கரோனா மாறியுள்ளதை மக்களுக்கு அரசு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஈஸ்வரன்
டாஸ்மாக் திறந்த பிறகுதான் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் கரோனா தடுப்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடவில்லை. கரோனா தீவிரம் குறையும்வரை முதலமைச்சரும் அமைச்சர்களும் சென்னையிலே தங்கி பணியாற்ற வேண்டும். முதலமைச்சருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததால் தினந்தோறும் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர். அரசுப் பணிகளை ஆய்வு செய்து அதிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டும் நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ்ஜை, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தாக்க வந்தனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சின்ராஜ் முன்னதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சிலரை சின்ராஜ் தரக்குறைவாக பேசியதாக அதிகமுவினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில், நாமக்கல் காவல் துறை பொய் வழக்கு தொடுத்துள்ளது கண்டிக்கதக்கது.பொய் வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details