தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமரைக்காக சேற்றை கொட்டுகிறார்கள்: கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம்

நாமக்கல்: தாமரை மலர வேண்டும் என்பதற்காக சேற்றை கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

kamalhassan

By

Published : Apr 16, 2019, 9:35 AM IST

நாமக்கல் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

”அரசின் அலட்சியத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலம் மாற மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிக்க வேண்டும். தாமரை மலர வேண்டும் என்பதற்காக சேற்றை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இந்தியா சர்வாதிகாரத்தை என்றுமே ஏற்காது என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details