தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜார்கண்ட்டில் நாமக்கல் மாணவர் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Jharkhand medical student death : நாமக்கலைச் சேர்ந்த முதுகலை மருத்துவக்கல்லூரி மாணவர் மதன்குமார் ஜார்கண்ட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jharkhand medical student death
ஜார்க்கண்ட்டில் தமிழக மருத்துவக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு சம்பவம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:31 PM IST

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மதியழகன், பூங்கொடி தம்பதியினர். மதியழகன் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது மகன் மதன்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2015 - 2020 கல்வி ஆண்டில் இளங்கலை மருத்துவம் பயின்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய கோட்டாவில் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் துறையில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். மேலும் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்ததாகவும் தெரிகிறது.

தற்போது மாணவர் மதன்குமார் நேற்று (நவ. 2) அதிகாலை சுமார் 5.40 மணியளவில் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள 4வது தளத்தில் இருந்து மர்மமான முறையில், அதுவும் தீயில் எரிந்த நிலையில் கீழே விழுந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது பரியாத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தகவலறிந்த மாணவர் மதன்குமாரின் பெற்றோர்கள் நேற்று (நவ. 2) மாலை ராஞ்சிக்கு விமானம் மூலம் கிளம்பி, சென்றடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவடைந்த பின் மாணவரின் உடல் இன்று அல்லது நாளை சொந்த ஊரான வேலகவுண்டன்ப்பட்டிக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் இறந்த தமிழக மாணவன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது சொந்த கிராமமான வேலகவுண்டன்ப்பட்டி மொத்தமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க: காடு, மலை கடந்து பயணம்... வாழ்வாதாரத்திற்காக அல்ல.. ஜனநாயக கடமையை நிறைவேற்ற!

ABOUT THE AUTHOR

...view details