நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை31) கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சமூகநலத்துறை மற்றும் மாற்றுதிறானாளிகள் நலத்துறை அலுவலர்களிடம் தடுப்பு பணிகள் குறித்த கேட்டறிந்த அமைச்சர் கரோனா குறித்து பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, “கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் 133.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.
அமைச்சர் சரோஜா செய்தியாளர்ச் சந்திப்பு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக சேந்தமங்கலம், குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் ஒரே நேரத்தில் 240 பேருக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றி உள்ளே வருபவர்களை கண்காணிக்க 54 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க...பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை அதிமுக அரசும், பாஜகவும் காப்பது ஏன்? இந்திய மாதர் சங்கம் அறிக்கை!